சென்னை: மத்திய வரவு செல வுத் திட்டத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தி உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000க்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
கடந்த இரு நாள்களில் மட் டும் தங்கம் விலை ரூ.1,296 அளவுக்குத் தாறுமாறாக அதி கரித்துள்ளதாகவும் கூறப்படு கிறது.
"தங்கம் என்பது பாமர மக்க ளால் சிறுகச் சிறுக சேர்க்கப்படும் முதலீடு. தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ள தால், ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால், இனி தங் கம் வாங்குவது ஏழை மக்க ளுக்குப் பகல் கனவாகவே மாறி விடும்," என விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் விமர்சித்துள்ளார்.
சாமான்ய மக்களுக்குப் பயன் அளிக்கும் பட்ஜெட் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்றுள்ளார். விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருப்பதாக காவிரி டெல்டா விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

