'அதிமுக பொதுச்செயலாளரை ஆணையம் அங்கீகரிக்கவில்லை'

2 mins read

சென்னை: அதி­முக இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சா­மியை அங்­கீ­க­ரிக்­க­வில்லை என உச்ச நீதி­மன்­றத்­தில் தேர்­தல் ஆணை­யம் பதில் மனுத் தாக்­கல் செய்­துள்­ளது.

அதி­முக இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக தன்னை அங்­கீ­க­ரிக்­கக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் பழ­னி­சாமி தாக்­கல் செய்த மனு­வுக்கு, மூன்று நாள்­க­ளுக்­குள் பதி­ல­ளிக்­கும்­படி தேர்­தல் ஆணை­யத்­துக்கு உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அதன்­படி தேர்­தல் ஆணை­யம் தாக்­கல் செய்­துள்ள பதில் மனு­வில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டத் தீர்­மா­னத்தை தேர்­தல் ஆணை­யம் ஏற்­க­வில்லை என்­றும் தற்­போ­தைய சூழ­லில் எடப்­பாடி பழ­னி­சா­மியை இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக அங்­கீ­க­ரிக்க இய­லாது என்­றும் ெதரி­வித்­துள்­ளது.

எனவே, பழ­னி­சா­மி­யின் இடை­யீட்டு மனுவைத் தள்­ளு­படி செய்­ய­வேண்­டும் என்­றும் உச்ச நீதி­மன்­றத்­தில் அதி­ரடி பதில் மனுத்தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த அறி­விப்­பால் அதி­மு­க­வில் இரட்­டைத் தலை­மையே நீடிக்­கிறது. இதனால், ஒற்­றைத் தலை­மை­யா­கச் செயல்­பட்டு வரும் பழ­னி­சாமிக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, பழ­னி­சாமி தாக்­கல் செய்த இடை­யீட்டு மனுவைத் தள்­ளு­படி செய்­யு­மாறு பன்­னீர்­செல்­வ­மும் மனுத்தாக்­கல் செய்­துள்­ளார்.

தன் மனு­வில், அதி­முக பிரதி­நிதி என்ற முறை­யில் இடை­யீட்டு மனுத்தாக்­கல் செய்ய பழனி­சா­மிக்கு உரிமை இல்லை என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் இரட்டை இலைச் சின்­னம் கேட்டு விண்­ணப்­பித்­தால் தேர்­தல் அதி­காரி உரிய முடிவு எடுப்­பார் என­வும் உத்தரவிட்டிருந்த நிலையில், இரட்டை இலைச் சின்­னம் முடக்­கப்­ப­டவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.