கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திடீர் திருப்பம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திடீர் திருப்பம்

1 mins read
978f8f76-dfdc-4f8e-a0d3-29f7141c091e
செங்­கல்­பட்டு: செங்­கல்­பட்டு ரயில் நிலை­யத்­தில் வெள்­ளிக்­கிழமை இரவு, ரயி­லுக்­குக் காத்­தி­ருந்­த­போது தன்னை நால்­வர் கும்­பல் கடத்தி கூட்டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக 21 வயது இளம்­பெண் புகார் அளித்­தார். படம்: பிக்ஸாபே -

செங்­கல்­பட்டு: செங்­கல்­பட்டு ரயில் நிலை­யத்­தில் வெள்­ளிக்­கிழமை இரவு, ரயி­லுக்­குக் காத்­தி­ருந்­த­போது தன்னை நால்­வர் கும்­பல் கடத்தி கூட்டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக 21 வயது இளம்­பெண் புகார் அளித்­தார். இந்­தச் சம்­ப­வத்­தில் நேற்று திடீர் திருப்­பம் ஏற்­பட்­டது.

தனது காத­ல­னைச் சிக்க வைக்கவே அந்த இளம்­பெண் போட்ட நாட­கம் இது என்­பது காவல்­துறை விசா­ர­ணை­யில் தெரியவந்­தது.

அந்த பெண், பெரம்­ப­லூர் மாவட்­டம் வேப்­பந்­தட்டை பகு­தி­யைச் சேர்ந்­த­வர். அவர் சைதாப்­பேட்­டை­யில் தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்து வந்­தார்.

உத்­தி­ர­மே­ரூரை அடுத்த மலை­யான்­கு­ளத்­தைச் சேர்ந்த சலீம் என்­கிற பிர­காஷ் என்­ப­வ­ருக்­கும் அவ­ருக்­கும் காதல் அரும்பியது.

இரு­வ­ரும் அடிக்­கடி தனிமை­யில் சந்­தித்து வந்­துள்­ள­னர். அதேபோல் நேற்­றும் இரு­வ­ரும் தனி­மை­யில் சந்­திக்க மாம்­பாக்­கம் பகு­திக்கு வந்­துள்­ள­னர்.

அப்­போது தன்னை திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும்­படி அந்த இளம்­பெண் தனது காத­ல­னான சலீ­மி­டம் கேட்­டுள்­ளார்.

காத­லன் மறுக்­கவே இரு­வருக்­கும் இடையே தக­ராறு ஏற்­பட்­டுள்­ளது. இதில் சலீம் அந்த இளம்­பெண்­ணைத் தாக்­கி­விட்டு சென்­று­விட்­டார்.

காத­ல­னைப் பழிவாங்­கவே காவல்­து­றை­யில் அந்தப் பெண் போலி­யாக புகார் கொடுத்தார் என்­பது தெரி­ய­வந்­தது.

விசாரணை தொடர்­கிறது.