புதுடெல்லி: சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 இடங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதி 25 இடங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், பயணிகளின் செலவுகளை ரூ.50,000 வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் மத்திய சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலையங்களில் இருந்து மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வது நீக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கண்ணூர், கொச்சி, விஜயவாடா, ஹைதராபாத், மும்பை, டெல்லி, உள்ளிட்ட 25 விமான நிலையங்களில் இருந்து பயணிகள் புறப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

