ஹஜ் பயணச் செலவை ரூ.50,000 வரை குறைக்க நடவடிக்கை

ஹஜ் பயணச் செலவை ரூ.50,000 வரை குறைக்க நடவடிக்கை

1 mins read
6dbc256c-dbe2-47f4-8ae3-f3fc9969db8d
புனித ஹஜ் பய­ணம் மேற்­கொள்­வது இஸ்­லா­மி­யர்­க­ளின் கட­மை­களில் ஒன்­று. கொரோனா பர­வல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலை­யங்­களில் இருந்து மட்­டுமே ஹஜ் பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: சென்­னை­யில் இருந்து ஹஜ் பய­ணம் செல்ல மீண்­டும் அனு­மதி வழங்­கப்பட்­டுள்­ளது. 10 இடங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதி 25 இடங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. நடப்­பாண்­டில் புனித ஹஜ் பய­ணத்­திற்­கான புறப்­பாடு இடங்­களில் சென்­னை­யும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், பயணி­க­ளின் செல­வு­களை ரூ.50,000 வரை குறைக்க நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள தாகவும் மத்­திய சிறு­பான்­மை­ யினர் நலத்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

புனித ஹஜ் பய­ணம் மேற்­கொள்­வது இஸ்­லா­மி­யர்­க­ளின் கட­மை­களில் ஒன்­று. கொரோனா பர­வல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலை­யங்­களில் இருந்து மட்­டுமே ஹஜ் பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் இருந்து பய­ணம் மேற்­கொள்­வது நீக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், இப்­போது சென்­னை­யில் இருந்து பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை, கண்­ணூர், கொச்சி, விஜ­ய­வாடா, ஹைத­ரா­பாத், மும்பை, டெல்லி, உள்­ளிட்ட 25 விமான நிலை­யங்­களில் இருந்து பய­ணி­கள் புறப்­ப­ட­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.