பனைக்குளம்: இலங்கையி லிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்பட்டதாகக் கடலோர குழும காவல் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தென் கடலோரப் பகுதி, வடக்குக் கடலோரப் பகுதிகளிலும் காவலர்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றுக் காலை பாம்பன் பகுதி அருகே நடுக்கடலில் ஒரு நாட்டுப் படகு வருவது தெரிய வந்ததும் அங்கு அவர்கள் விரைந்து சென்றனர். காவலர் களைக் கண்டதும் படகில் இருந்த இருவர் சில பொருட்களை எடுத்துக் கடலில் வீசினர். அந்தப் படகை சுற்றி வளைத்து அதில் இருந்த இருவரை காவலர்கள் விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரனாகப் பேசினர். இலங்கை யிலிருந்து பலகோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்த அவர்கள் கடலில் வீசியிருக்கலாம் என காவலர்கள் நம்புகின்றனர்.
பலகோடி ரூபாய் தங்கக்கட்டிகளைத் தேடி காவலர்கள் வேட்டை
1 mins read

