சென்னை: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள மூன்று பழைய விமானங்களை அகற்ற ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று பதிவு நீக்கம் செய்யப்பட்ட விமானங்கள் நீண்டகாலத்திற்கு முன்பே சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாகவும் அவற்றைத் தற்போதைய உரிமையாளர்கள் பொருந்தக் கூடிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தி 10.02.2023 அன்று அல்லது அதற்கு முன் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து அகற்றுமாறு பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஏஏஐ சட்டம் 1994ன் கீழ் மேற்கூறிய மூன்று விமானங்களை அகற்றுவதற்கான வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. விசாரணை தேதி 10.02.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும். விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்தில் உரிமையாளர்கள் விசாரணைக்கு வருமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறார்கள். இல்லையெனில் நடவடிக்கைகள் வெகுவேகத்தில் நடைபெறும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

