ஆடவர் வெறிச் செயல்: ஒரே குடும்பத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் கருகி மரணம்

ஆடவர் வெறிச் செயல்: ஒரே குடும்பத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் கருகி மரணம்

2 mins read
23f50f31-2b84-42e5-b12d-6609cb1ba15f
-

கட­லூர்: மனை­வி­யைத் தண்­டிக்க நினைத்து ஆட­வர் ஒரு­வர் பெட்­ரோலை ஊற்­றி­ய­தில் அவர் உட்­பட ஐந்து பேர் தீயில் கருகி மாண்­ட­னர்.

கட­லூ­ரில் நேற்று முன்­தி­னம் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. சற்­குரு, 26, எனப்­படும் அந்த ஆட­வர் தேனாம்­பட்­டி­னத்­தைச் சேர்ந்­த­வர். சிதம்­ப­ரத்­தைச் சேர்ந்த தன­லெட்­சுமி, 24, என்­ப­வரை அவர் காத­லித்து மணந்­து­கொண்­டார். அவர்­க­ளுக்கு லக்­சன் என்ற பெய­ரில் கைக்­கு­ழந்தை இருந்­தது.

கட­லூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­மனை ஒன்­றில் தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­யாற்­றிய சற்­குரு, அண்­மை­யில் வேலை­யின்றி இருந்­தார்.

இந்­நி­லை­யில் கண­வ­னுக்கு வேறு ஒரு பெண்­ணு­டன் தொடர்பு ஏற்­பட்­ட­தால் தம்­ப­திக்­குள் மோதல் ஏற்பட்டு, தன­லட்­சுமி தனி­யாக வசித்­துள்­ளார்.

இத­னால், சற்­குரு அவ­ரி­டம் விவா­க­ரத்து கேட்டு நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­தார்.

விவா­க­ரத்து வழக்கு கட­லூர் நீதி­மன்­றத்­தில் நேற்று முன்

­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­த­போது தன­லெட்­சுமி விவா­க­ரத்­துக்கு சம்­ம­திக்­கா­மல் குழந்­தை­யு­ட­னும் தமது தாய் செல்­வி­யு­ட­னும் அக்கா தமி­ழ­ர­சி­யின் வீட்­டுக்­குச் சென்­று­விட்­டார்.

பின்­தொ­டர்ந்து வீட்­டுக்­குச் சென்ற சற்­குரு, தன­லெட்­சு­மி

­யு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். பின்­னர் வெளி­யில் இருந்த தமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து பெட்­ரோலை எடுத்து வந்த சற்­குரு, வீட்­டின் கத­வைச் சாத்தி உட்­பு­றம் தாழ்ப்­பாள் போட்­டார்.

குழந்­தை­கள் உட்­பட அங்­கி­ருந்த அத்­தனை பேர் மீதும் சற்­குரு பெட்­ரோலை ஊற்­றி­ய­தா­க­வும் எரிந்­து­கொண்­டி­ருந்த தீப்­பொறி பறந்து மின்­னல் வேகத்­தில் அத்­தனை பேர் மீதும் பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

சிறிது நேரத்­தில் வீட்­டுக்­குள் இருந்து பலர் அல­றும் சத்­தம் கேட்­டது. அக்­கம்­பக்­கத்­தி­னர் ஓடி­வந்து பார்த்­த­தில் தன­லட்சுமி, சற்­குரு, இவர்­க­ளது 9 மாதக் குழந்தை லக்­சன், தமிழரசி, 27, தமி­ழ­ர­சி­யின் 4 மாதக் குழந்தை பி.ஹாசினி, தாயார் செல்வி, 50, ஆகிய 6 பேர் மீதும் தீப்­பற்­றி­யது. தமி­ழ­ர­சி­யும் கைக்­கு­ழந்­தை­க­ளான ஹாசினி, லக்­ச­னும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

கட­லூர் சிப்­காட் தீய­ணைப்­புப் படை­யி­னர் சென்று தீயை அணைத்து, உயி­ருக்­குப் போரா­டிய செல்வி, சற்­குரு, தன­லட்­சுமி ஆகி­யோரை மீட்டு கட­லூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். அங்கு சிகிச்சை பல­னின்றி சற்­குரு உயி­ரி­ழந்­தார். அவ­ரது மனைவி தன­லெட்­சுமி நேற்­றுக் காலை சிகிச்சை பல­னின்றி மாண்­டார். 90 விழுக்­காடு தீக்­கா­யம் அடைந்த செல்வி, மேல் சிகிச்­சைக்­காக புதுச்­சேரி ஜிப்­மர் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார்.

அந்­தக் குடும்­பத்­தில் இவர் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலை­யில், நேற்று மாலை வரை உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்­தார். இந்த சோகச் சம்­ப­வம் குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.