வெற்றியை நிர்ணயிக்கும் 7,000 வடமாநிலத்தவர்

வெற்றியை நிர்ணயிக்கும் 7,000 வடமாநிலத்தவர்

2 mins read

ஈரோடு: இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் 80க்கும் மேற்­பட்­ட­வர்­கள் போட்­டி­

யி­டும் சூழல் நில­வு­வ­தால் ஒவ்­வொரு பூத்­தி­லும் 3 அல்­லது 4 வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­களை வைக்­கும் நிலை ஏற்­பட்டுள்­ளது. ஒரு வாக்கு இயந்­தி­ரத்­தில் 16 பேரின் பெயர் மற்­றும் சின்­னத்தை மட்­டுமே பதிவு செய்­யமு­டி­யும். வேட்­பு­ம­னுக்­கள் பரி­சீ­ல­னைக்­குப் பின்­னர் 83 மனுக்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளன.

அதி­முக வேட்­பா­ளர் தென்­ன­ரசு, காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன், தேமு­திக வேட்­பா­ளர் ஆனந்த், நாம் தமி­ழர் கட்சி வேட்­பா­ளர் மேனகா நவநீதன் ஆகி­யோ­ரின் மனுக்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதன்­மூ­லம் இன்­றைய நில­வ­ரப்­படி 83 பேர் போட்­டி­யில் உள்­ள­னர். வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப் பெற இன்று (பிப்­ர­வரி 10) பிற்­ப­கல் 3 மணி வரை காலக்­கெடு அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. இதன் பிறகு சுயேச்சை வேட்­பா­ளர்­க­ளுக்­கான சின்­னங்­கள் ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

இந்­நி­லை­யில், இந்த முறை இந்­தத் தொகுதி­யின் வெற்­றியை நிர்­ண­யிப்­ப­வர்­களில் வட­மா­நி­லத்­த­வர்­கள் முக்­கிய இடம்­பெற்று உள்­ள­னர். காவி­ரிக்­க­ரை­யோர தொகு­தி­யாக ஈரோடு கிழக்குத் தொகுதி இருக்­கிறது. வட­மா­நி­லத்­த­வர்­கள் பெரும்­பா­லும் மின்பொருள் கடை மற்றும் துணிக்கடைகளை அதிக அள­வில் வைத்­துள்­ள­னர். வட­மா­நில வாக்­கா­ளர்­கள் மட்­டும் இந்­தத் தொகு­தி­யில் 7,000 பேருக்கு மேல் உள்­ள­னர்.

கடந்த முறை திமுக கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் திரு­ம­கன் ஈவேரா, அதி­முக கூட்­ட­ணி­யில் நின்ற தமாகா வேட்­பா­ளர் எம்.யுவ­ரா­ஜா­வைக் காட்­டி­லும் ஏறக்குறைய 8,900 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார்.

தற்­போது இரட்டை இலைச் சின்­னத்­து­டன், பாஜக ஆத­ர­வு­டன் அதி­முக களம் இறங்கி உள்­ளது. பொது­வாக வட­மா­நி­லத்­த­வர்­கள் பாஜக ஆத­ரவு நிலை­யைக் கொண்­ட­வர்­கள். அவர்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற அதி­முக கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ரைக் காட்­டி­லும் திமு­க­வி­னர் பெரு­மு­யற்சி எடுத்து வரு­கின்­ற­னர்.

ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் கருங்­கல்­பா­ளை­யம் பகுதியில் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு வட­மா­நி­லத்­த­வர்­க­ளின் வீடு­களை அடை­யா­ளம் கண்டு ஒவ்­வொரு வீடா­கச் சென்று காங்­கி­ரஸ் வேட்­ப­ளா­ருக்கு ஆத­ரவு திரட்­டி­னார். குறிப்­பாக, அந்­தப் பகு­தி­யில் ஜவு­ளித் தொழி­லில் ஈடு­பட்டு இருப்­போ­ரைச் சந்­தித்து அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கேட்­டறிந்த தங்­கம் தென்­ன­ரசு, திமுக கூட்­டணி வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

83 வேட்பாளர்களின் மனு ஏற்பு; ஒவ்வொரு பூத்திலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள்