சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றுக் காலை சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அமைச்சர்களும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நட
வடிக்கைகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துக்கூறினார்.
"கடந்த 20 மாத காலத்தில் எத்தனையோ நல்ல பல திட்டங்களை உருவாக்கிச் செயல்
படுத்தி வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணடைந்துள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்மை வாழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.
"இலவச மின் இணைப்பு பெறும் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். அதேபோல மாதந்தோறும் ரூ.1,000 பெறும் மாணவியர் பாராட்டுகின்றனர். இவை அனைத்துமே நம்முடைய கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய மகிழ்ச்சிகள்.
"இதேபோல எல்லாத் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும் போது 8 கோடி மக்களாலும் பாராட்டப்படும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும். இது உங்கள் கைகளில்தான் உள்ளது. அறிவிக்கப்பட்ட செயல்திட்டங்கள் எப்படி பயன்பாட்டுக்கு வருகின்றன என்று பார்க்க வேண்டும்.
"அதில் சுணக்கம் வந்தால் எதனால் வருகிறது, அந்தத் திட்டத்தை முடிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்," என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

