ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம்
சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழ் நாடு என்ற பெயரை காம ராசர் ஏற்றுக் கொள்ளாத
தால் அவருக்கு வீழ்ச்சி தொடங் கியது என்று திமுக எம்.பி.யான ஆ.ராசா, கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. காமராசர் பற்றிய உண்மை வரலாற்றை அவர் திரித்துப் பேசியதாகக் கூறி நாடார் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (படம்: தமிழக ஊடகம்)
ஓய்வுபெறுகிறார் இறையன்பு
சென்னை: தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு ஓய்வுபெறும் நாள் நெருங்கும் நிலையில் இம்மாதம் 28ஆம் தேதியோடு விருப்ப ஓய்வில் அவர் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கம்
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் கடலில் கடத்தல்காரர்கள் வீசிய தங்கக் கட்டிகளை முக்குளிப்பு வீரர்கள் உதவியுடன் இந்தியக் கடற்படை அதிகாரிகள் நேற்று மீட்டனர். மீட்கப்பட்ட தங்கத்தின் எடை 12 கிலோ. அதன் மதிப்பு ஏறக்குறைய 7.5 கோடி ரூபாய்.
பறக்கும் அதிமுக தாம்பூலத்தட்டு
திருமங்கலம்: அதிமுகவின் 51வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் 51 ஜோடிகளுக்கு ஜெய லலிதா பேரவை சார்பில் திருமணம் நடத்தப்படுகிறது. பேரவைச் செய லாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமா ரின் மகள் பிரியதர்ஷினியின் திருமணமும் இதனுடன் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழுடன் தாம்பூலத்தட்டு (படம்) ஒன்றும் தென்மாவட்டங்கள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் தட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

