ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 11 பேர் பொய்சாட்சி

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 11 பேர் பொய்சாட்சி

1 mins read

சென்னை: அமைச்­சர் கே.என்.நேரு­வின் தம்பி ராம­ஜெ­யம் (படம்) கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்­டம் திரு­வ­ளர்­

சோ­லை­யில் படு­கொலை செய்யப்­ ­பட்­டார். 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக சிபிஐ வரை விசா­ரித்­தும் கொலை­யா­ளி­க­ளைப் பிடிக்கமுடி­யா­மல் விசா­ரணை நீள்கிறது.

இந்த நிலை­யில், விசா­ர­ணை­யில் இருந்த 13 பேரில் ஒரு­வர் மட்­டும் சம்­ம­திக்­கா­த­தால் இதர 12 பேரி­டம் உண்மை கண்­ட­றி­யும் சோதனை நடத்­தப்­பட்­டது.

ஜன­வரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாள்­கள் நடை­பெற்ற இச்­சோ­த­னை­யில் நிபு­ணத்­து­வம் பெற்ற தட­ய­வி­யல் நிபு­ணர் மோசஸ் தலை­மை­யில் அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர்.

கேள்­வி­கள் கேட்­கும்­போது அவர்­க­ளின் பதி­லில் உண்மை உள்­ளதா என்­பதை அவர்­க­ளின் இரு­த­யத் துடிப்பு மற்­றும் மூளை­யின் செயல்­பா­டு­க­ளின் அள­வீ­டு­களை வைத்து கணக்­கி­டப்­படும். அந்த சோத­னை­யின் முடிவு தற்­போது அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

உண்மை கண்­ட­றி­யும் சோத­னை­யில் திலீப் என்­ப­வர் தவிர மற்ற 11 பேரும் பொய் கூறி­ய­தாக அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் இத­யத் துடிப்­பும் மூளை­யின் செயல்­பா­டும் மாறு­பட்­ட­தால் உண்­மையை 11 பேர் மறைக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வந்­தது. இந்த அறிக்கையின் அடிப்­ப­டை­யில் அடுத்­த­கட்ட விசா­ர­ணைக்­கு சிறப்­புப் புல­னாய்­வுக்குழு தயா­ராகி வரு­கிறது.