சிறைச்சாலையில் முதல்முறையாக நூலகத் திட்டம்

சிறைச்சாலையில் முதல்முறையாக நூலகத் திட்டம்

1 mins read

கோவை: தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மத்திய சிறைச்சாலையில் மின்னிலக்க நூலகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறைவாசிகள் அவரவர் அறைகளில் இருந்தபடியே காணொளி, ஒலி அலை வாயிலாக ஒரு புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு, ரசிக்கலாம். "ஒரே சமயத்தில் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் அனைத்து கைதிகளும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி, ஒளி வடிவில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 56 தொலைக்காட்சிகள் மூலம் பார்க்க, கேட்க முடியும்," என்று சிறைத் துறை டிஐஜி பழனி கூறியுள்ளார்.