புதுடெல்லி: தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
"கீழடி, நத்தம், அரியலூர்- கங்கைகொண்ட சோழபுரம், விருதுநகர் - வெம்பக்கோட்டை, திருநெல்வேலி- துலுக்கர்பட்டி, திருவள்ளூர் - பட்டறைப் பெரும்புதுார், கிருஷ்ணகிரி - மயிலாடும்பாறை, புதுக் கோட்டை - பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களில் இந்த மாதத்திலேயே அகழாய்வு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது," என்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய அதிகாரிகள் கூறினர்.

