புதுடெல்லி: தனது பள்ளியில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியில் மிகவும் துடிப்பாக விளையாடிக்கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி கீதா (உண்மைப் பெயரல்ல) கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மாணவிக்குத் தண்ணீர் கொடுத்தும் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர் எழுந்திருக்காததால், ஆசிரியர்கள் அவரை மருத்துவ மனைக்கு தூக்கிச்சென்றனர்.
பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு மாணவி இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் கூறினர்.