களத்தில் 77 வேட்பாளர்கள்; அனல் பறக்கும் பிரசாரம்: ராணுவத்தினர் வருகை ஈரோட்டில் நான்கு முனைப் போட்டி

களத்தில் 77 வேட்பாளர்கள்; அனல் பறக்கும் பிரசாரம்: ராணுவத்தினர் வருகை ஈரோட்டில் நான்கு முனைப் போட்டி

2 mins read
8162412d-1c4a-484b-a727-44c9f93aece5
-
multi-img1 of 2

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் நான்கு முனைப் போட்டி நில­வும் சூழ­லில், அந்­தந்த கட்­சி­யி­ன­ரும் வீடு­வீ­டா­கச் சென்று அனல் பறக்­கும் பிர­சா­ரம் செய்து வாக்­கு சேக­ரித்து வரு­கின்­ற­னர்.

இத­னால், முக்­கிய கட்­சிப்­ பிர­மு­கர்­கள் பல­ரும் இப்­ப­கு­தி­யில் முற்­று­கை­யி­டத் தொடங்கி உள்ளதால், ஈரோடு தொகுதி முழு­வ­தும் விழாக்­கோலத்துடன் காட்சியளிக்கிறது.

இந்த இடைத்­தேர்­த­லில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டி யிடுகின்றனர்.

இடைத்­தேர்­தல் பாது­காப்­புப் பணிக்­காக மத்­திய தொழில் பாது­காப்­புப் படை, ரயில்வே பாது­காப்­புப் படையைச் சேர்ந்த 180 வீரர்­கள் ஈரோட்­டுக்கு வந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர் இபி­எஸ் கூறு­வது போல் திமுக அரசு மீது மக்­கள் எந்­தக் குற்­றச்­சாட்­டும் கூற­வில்லை என்று ஈரோடு பிர­சா­ரத்­தில் பேசிய அமைச்­சர் முத்­து­சாமி தெரி­வித்­தார்.

வரும் 27ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்ள நிலை­யில், ஈரோட்­டில் உள்ள உண­வ­கம் ஒன்­றில் பொதுமக்­க­ளுக்கு புரோட்டா சுட்­டுக்­கொ­டுத்து ஈவி­கே­எஸ் இளங்­கோ­வ­னுக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளிக்­கும்­படி அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் கேட்­டுக்­கொண்­டார்.

மற்­றொரு அமைச்­ச­ரான தங்­கம் தென்­ன­ரசு இரு­சக்­கர வாக­னத்­தில் தொண்­டர்­க­ளு­டன் சென்று வாக்­குச் சேக­ரித்­தார்.

அதி­முக வேட்­பா­ளர் தென்ன ரசுக்கு ஆத­ரவு திரட்ட பாஜக களத்­தில் இறங்கி உள்ள சூழ­லில், அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஆர்.பி. உத­ய­கு­மார் தேநீர் கடை­யில் தேநீர் போட்­டுக் கொடுத்து தென்­ன­ர­சுக்கு வாக்­குச் சேக­ரித்­தார். அத்­து­டன் சல­வைக் கடை­யில் துணி­களை இஸ்­திரி செய்­து­கொ­டுத்­தும் வாக்­குச் சேக­ரித்­தார்.

"இதெல்­லாம் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் வெற்­றி­பெ­றும் வரை­தான். அதன்­பின்­னர் இவர்­களில் யாரை­யும் பார்க்­க­முடி­யாது," என்று அங்­குள்ள மக்­கள் வருத்தத்துடன் கூறி­னர்.

மணல்­மேடு பகு­தி­யில் முன்­னாள் அமைச்­சர்­கள் செம்­மலை, கே.வி.ராம­லிங்­கம் ஆகி­யோ­ரு டன் வீடுவீடா­கச் சென்று தென்­ன­ரசு இரட்டை இலைச் சின்­னத்­திற்கு வாக்­குச் சேக­ரித்­தார்.

"பண பலம், அதி­கார பலத்­தின் மூலம் திமுக வெற்றிபெறத் துடிக்­கிறது. பணம், பிரி­யா­ணி­யைக் கொடுத்து அதிமுக கூட்­டத்­துக்கு மக்­களை வர­வி­டா­மல் தடுக்­கிறது," என்று அதிமுக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­குமார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்­துள்ளார்.