தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை எய்ம்ஸ் விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 mins read

புது­டெல்லி: மதுரை எய்ம்ஸ் தொடர்­பாக உரிய விளக்­கம் அளிக்­காத மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­ச­ரைக் கண்­டித்து திமுக, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 16 கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் மக்­க­ள­வை­யில் இருந்து வெளி­ந­டப்பு செய்­த­னர்.

மதுரை தோப்­பூ­ரில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டப்­படும் என கடந்த 2015ஆம் ஆண்டு மத்­திய அரசு அறி­வித்­தது.

ஆனால், மதுரை எய்ம்ஸ் கட்டு­மா­னப் பணிக்­கான எந்­தப் பணி­யும் நடை­பெறவில்லை.

இது­தொ­டர்­பாக மக்­க­ளவை யில் நாடா­ளு­மன்­றத் திமுக குழுத் தலை­வர் டி ஆர் பாலு கேள்வி எழுப்­பி­னார்.

இதற்குப் பதி­ல­ளித்த மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா, இந்த விஷ­யத்தை அர­சி­யல் ஆக்­கு­வ­தா­க­வும் தவ­றான தக­வல்­க­ளைக் கூறுவ­தா­க­வும் தெரிவித்தார்.

"இப்போது மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்பு தொடங்கி விட்டது. எதற்காக உங்கள் மாநில மக்களுக்குத் தவறான தகவல்களைச் சொல்கிறீர்கள். மதுரையில் எய்ம்ஸ் இயக்குநர் இருக்கிறார். அங்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன," என்றார்.

இதையடுத்து, பேசிய பேர வைத் தலைவர் ஓம் பிர்லா, மன்சுக் கூறிய தகவல்கள் சரியா? இல்லையா? என்பதை ஆராய்வதாக உறுதியளித்தார்.