காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று 200வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களையும் இதர நிலங்களையும் கையகப் படுத்தும் பணிகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

