சிங்கப்பூர், துபாயிலிருந்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்

சிங்கப்பூர், துபாயிலிருந்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்

2 mins read

திருச்சி: வெளி­நா­டு­களில் இருந்து திருச்­சிக்கு வரும் விமா­னங்­களில் தங்­கம் கடத்­து­வது அண்­மை­யில் அதிகரித்துள்­ளது.

இத­னால் அதி­கா­ரி­கள் விழிப்­பு­டன் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ரி­ல்­இருந்து 'ஸ்கூட்' விமா­னம் சனிக்­கி­ழமை இரவு திருச்சி வந்­தது.

இந்த விமா­னத்­தில் பய­ணம் செய்த பய­ணி­களை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது மது­ரை­யைச் சேர்ந்த 41 வயது நப­ரின் நட­வடிக்கை வித்­தி­யா­ச­மாக இருந்த தால் அதி­கா­ரி­களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உட­ன­டி­யாக தனி அறைக்கு அழைத்­துச் சென்று அவரை அதிகாரிகள் சோத­னை­யிட்­ட­னர்.

அவர் கொண்டு வந்த பொருள்­களை சல்­ல­டை ­போட்டு நவீன கருவி மூலம் சோதனை செய்­யப்பட்டது.

இதில் மின்­னணு சாத­னங்­களில் அவர் தங்­கத்தை மறைத்து கடத்தி வந்­தது தெரியவந்­தது.

அவ­ரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்­ளிக் ­கி­ழமை துபா­யில் இருந்து 'ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ்' விமா­னம் திருச்சி வந்­தது.

இந்த விமா­னத்­தில் வந்த திருச்­சியைச் சேர்ந்த 43 வயது நபர் மீது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.

அவரை தனி­யாக அழைத்­துச் சென்று அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது அவர், உட­மை­களில் மறைத்து தங்­கம் கடத்தி வந்­தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ­ரி­டம் இருந்து தங்­கத்தை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

அவர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இரு பய­ணி­க­ளி­டம் இருந்து மொத்­தம் 1,516 கிராம் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதன் மதிப்பு இந்­திய ரூபா­யில் 86 லட்­சம் எனக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2 நாட்­களில் ரூ.1 கோடியே 33 லட்­சம் மதிப்­பி­லான தங்­கத்தை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்தனர்.