திருவண்ணாமலை: திருவண்ணா மலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்துள்ள ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாக காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
"இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே அரியானா, மகாராஷ் டிரா, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந் துள்ளன. பல நாள்களாகத் திட்டமிட்டு, கைதேர்ந்த கொள் ளையர்கள் கைவரிசையைக் காட்டி உள்ளனர்," என மேலும் அவர் கூறினார்.
இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகா, கேரள எல்லையோரப் பகுதிகளிலும் வாகனச் சோத னையைக் காவலர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அத்துடன், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தனிப்படை காவலர்கள் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர் களிடம் பேசிய ஐஜி கண்ணன், "திருவண்ணாமலையில் மட்டும் நான்கு ஏடிஎம்களில் ஏறக் குறைய ரூ.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தடயங்களை மறைப்பதற்காக கொள்ளையர்கள் ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களையும் சிசிடிவி கேமராக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளையர்களைப் பிடிப்பதற் காக எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரண்டு நாளில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம்," என்றார்.
"ஏடிஎம் இயந்திரம் குறித்து நன்கு தெரிந்தவர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை பழுதுபார்ப்பவர் கூட கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.
திருவண்ணாமலை நகரில் பொருத்தப்பட்டிருந்த 400 சிசிடிவி பதிவுகளை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
"தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாகி வருவதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு மக்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது?" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 48 இடங்களில் சோதனை நடந்தது. கார், லாரி உட்பட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல காவலர்கள் அனுமதித்தனர். படம்: தமிழக ஊடகம்

