மனநலம் குன்றிய பெண்களைக் குரங்கு கடிக்கவிட்டு சித்திரவதை

மனநலம் குன்றிய பெண்களைக் குரங்கு கடிக்கவிட்டு சித்திரவதை

2 mins read
698c0987-b768-4507-b1c7-93f817fe17c2
-

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரம் மாவட்­டத்தில் செயல்­பட்டு வந்த 'அன்பு ஜோதி' ஆத­ர­வற்­றோர் இல்­லத்தை மூடி அம்­மா­வட்ட ஆட்­சி­யர் பழனி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடைத்­து ­வைத்து சித்­தி­ர­வதை செய்­ததை அடுத்து இந்நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆசி­ர­மத்­தில் குரங்­கு­கள் வளர்க்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை இந்­தக் குரங்­களை விட்டு கடிக்க வைத்து, பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தா­க­வும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

குரங்­கு­க­ளால் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்ற அச்­ச­மும் நிலவுகிறது.

விழுப்­பு­ரம் மாவட்­டம், விக்­கிர வாண்டி அருகே உள்ள குண்­ட­ல­பு­லி­யூர் கிரா­மத்­தில் உள்ள 'அன்பு ஜோதி' இல்­லத்­தில் மன­ந­லம் குன்­றி­யோர், மாற்­றுத் திற­னா­ளி­கள், ஆத­ர­வற்­றோர் உள்­ளிட்ட 150க்கும் மேற்­பட்­டோர் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், இந்த இல்­லத்­தில் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த ஒருவர் காணாமல் போனதால், அவரது உற­வி­னர் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தில் சோதனை நடத்த சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்தது.

சோத­னை­யில் இல்­லத்­தில் இருந்­த­வர்­களில் 17 பேர் காணா மல் போன­தாக கடந்த வாரம் அதிர்ச்­சித் தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து ஆறு பேர் மீது 13 பிரி­வு­களில் வழக்­குப் பதிந்து நான்கு பேரை கைது செய்­துள்ள காவ­லர்­கள், சிகிச்­சை­யில் உள்ள இல்­லத்­தின் நிர்­வாகி ஜுபின் பேபி, 45, அவ­ரது மனைவி மரியா ஜுபின், 43, ஆகி­யோரை கைது செய்­ய­வும் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்களி­டம் பேசிய மாவட்ட ஆட்­சி­யர் பழனி, "ஆசி­ர­மத்தை உரிய அனு­ம­தி­யின்றி நடத்­தி­ய­தும் அங்கு தங்­கி­யி­ருந்­த­வர்­களை சித்­தி­ர­வதை செய்து பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கி­யதும் தெரி­ய­வந்­துள்­ளது.

"இதை­ய­டுத்து சம்­பந்தப்­பட்ட இல்­லத்தை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது," என்­றார்.

ஆசி­ர­மத்­தில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த 142 பேர் முண்­டி­யம்­பாக்­கத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் இரு நாள்­க­ளாக சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மாவட்­டம் முழு­வ­தும் உள்ள காப்­ப­கங்­களில் சோதனை நடத்­த­வும் உத்­த­ர­வி­டப்­பட்டு இருப்­ப­தா­க­ தெரி­வித்­த ஆட்சியர் பழனி, சிகிச்சைக்குப் பிறகு ஆத­ர­வற்­றோரை அரு­கில் உள்ள மற்ற காப்­ப­கங்­களில் தங்கவைக்க ஏற்­பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.