செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
1f7d8a45-ef2c-4934-ae3d-9f9f118e1350
-

'என்னுடன் மோத தகுதியில்லை'

சென்னை: சென்னையில் வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது, "பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா, என்னை ரவுடி என்று அழைக்கிறார். என்னுடன் மோதும் அளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல. நான் ரவுடித் தனத்தை விட்டுவிட்டு, எனது குடும்பத்துக்காக திருந்தி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை ரவுடி என்று அழைப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

438 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் 438 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. ஆந்திர பதிவெண் கொண்ட காரில் கடத்தி வரப்பட்ட 197 பாக்கெட்டுகள் கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் கஞ்சா கடத்திய மூவரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடமாநிலத் தொழிலாளர்களை கண்காணிக்க வலியுறுத்து

சென்னை: தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இவற்றில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்களைக் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் மக்கள் அச்சமின்றி வாழவும் காவல்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.