பழ. நெடுமாறனை சந்திப்பதை தவிர்த்துவிட்ட வைகோ, திருமா

பழ. நெடுமாறனை சந்திப்பதை தவிர்த்துவிட்ட வைகோ, திருமா

2 mins read
8604ef48-162a-412c-96cc-e59d4b337d39
-

தஞ்­சா­வூர்: விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரு­டன், நல­மா­கத் தான் இருக்­கி­றார் என்ற அறி­விப்பை வெளி­யி­டு­வ­தற்கு முன்­பாக, இது­கு­றித்து தமி­ழீழ விடு­தலை ஆத­ரவு தலை­வர்­க­ளு­டன் ஆலோ­சிப்­ப­தற்­காக பழ நெடு மாறன் (படம்) அழைப்பு விடுத் திருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், அவ­ரது இந்த அழைப்பை வைகோ, திருமா வள­வன், வேல்­மு­ரு­கன், கொளத்­தூர் மணி போன்­றோர் புறக்­க­ணித்து விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்த அறி­விப்பு வெளி­யிடு வதற்கு முன்­ன­தாக, முதல் நாள் இரவு தஞ்­சா­வூர் வந்த வைகோ, பழ.நெடு­மா­றனை சந்­திக்கா மலேயே திரும்­பிச் சென்று விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

பழ.நெடு­மா­ற­னு­டன் விவா­திக்க தமி­ழீழ ஆத­ரவு தலை­வர்­க­ளான வைகோ, திருமா வள­வன், வேல்­மு­ரு­கன், கொளத் தூர் மணி உள்­ளிட்­டோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தஞ்­சா­வூர் முள்ளி வாய்க்­கால் முற்­றத்­து­டன் தொடர்­புள்­ள­வர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

அதன்­படி, பிப்­ர­வரி 12ஆம் தேதி இரவு தஞ்­சா­வூர் வந்த வைகோ, தமிழ்­நாடு தங்­கும் விடு­தி­யில் தங்­கி­யி­ருந்­தார். மற்ற தலை­வர்­கள் யாரும் வராத நிலை யில், மறு­நாள் காலை தன் அறையை காலி செய்­து­விட்டு வைகோ தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்­று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதே­போல் திரு­மா­வ­ள­வன், வேல்­மு­ரு­கன், கொளத்­தூர் மணி போன்­றோ­ரும் வர­வில்லை.

இத­னி­டையே 13ஆம் தேதி காலை செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பழ.நெடு­மா­றன், விடு­தலைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரு­டன் இருப்­ப­தாக அறி­வித்­தார்.

இது­தொ­டர்­பாக வைகோ வெளி­யிட்ட அறிக்­கை­யில், ''பிர­பா­க­ர­னோடு களத்­தில் நின்ற போரா­ளி­கள் சிலர் இன்­னும் உல­கின் பல நாடு­க­ளி­லும் வசிக்­கின்­ற­னர். என்­னு­டன் தொடர்­பில் இருக்­கும் அந்­தப் போரா­ளி­கள், பழ.நெடு­மா­றன் வெளி­யிட்ட செய்தி குறித்து உறு­திப்­ப­டுத்­த­வில்லை," என்­றார்.

"எனி­னும், அவர் கூறி­ய­படி பிர­பா­க­ரன் நல­மு­டன் இருந்­தால் அதை­விட மகிழ்ச்சி தரக்­கூ­டிய செய்தி வேறு ஏது­மில்லை,'' என­வும் வைகோ தெரி­வித்­துள்­ளார்.

''தஞ்­சா­வூ­ருக்கு வைகோ வந்­தி­ருந்­தும், அவர் பழ.நெடு மாறனை சந்­திக்­கா­மல் சென்­ற­தற்கு வேறு சில அர­சி­யல் கார­ணங்­கள் இருக்­க­லாம்,'' என்று உல­கத் தமி­ழர் பேர­மைப் பின் நிர்­வாகி ஒரு­வர் கூறி­னார்.

ஆனால், திரு­மா­வ­ள­வன், வேல்­மு­ரு­கன், கொளத்­தூர் மணி போன்­றோ­ருக்கு அழைப்பு விடுத்­தும், அவர்­கள் வரா­தது ஏன் என்று தெரி­ய­வில்லை என பழ.நெடு­மா­றன் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து தஞ்­சா­வூ­ரில் உள்ள முள்­ளி­வாய்க்­கால் நினைவு முற்­றத்­தில் தங்­கி­யி­ருக்­கும் பழ.நெடு­மா­ற­னின் நட­வ­டிக்­கை­களை உள­வுத்­துறை காவ­லர்­கள் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.