ரவுடிகள் இருவரை சுட்டுப் பிடித்த காவலர்கள்

ரவுடிகள் இருவரை சுட்டுப் பிடித்த காவலர்கள்

1 mins read
1b403a9a-cddf-48bc-ab9a-77c231d8cc12
-

கோவை: கோவை நீதி­மன்­றம் அருகே பட்­டப்­ப­க­லில் கோகுல் என்ற வாலி­பர் கொல்­லப்­பட்ட வழக்­குத் தொடர்­பில் இரு­வரை காவ­லர்­கள் சுட்­டுப் பிடித்­துள்­ள­னர்.

இரு­சக்­கர வாக­னத்தை தந்­தது, கொலை­யா­ளி­க­ளுக்கு அடைக்­க­லம் தந்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின்­கீழ் மேலும் மூவர் கைதா­னதை அடுத்து, இது­வரை கைதா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 10ஆக உயர்ந்­துள்­ளது.

கோகுல் கொல்­லப்­பட்ட வழக்­கில் நேர­டித் தொடர்­பு­டைய ஏழு பேரை ஏற்­கெ­னவே கைது செய்­தி­ருந்த காவ­லர்­கள், அவர்­களை அழைத்து வந்­த­போது மேட்­டுப்­பா­ளை­யம் அருகே இரு­வர் தப்­பிக்க முயற்சி செய்­துள்­ள­னர்.

ஜோஸ்வா, கவு­தம் ஆகி­யோர் தப்பி ஓடும்­போது காவ­லர்­கள் அவர்­க­ளைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுப் பிடித்­துள்­ள­னர்.

கோவை­யில் உள்ள லட்­சுமி நக­ரைச் சேர்ந்­த­வர் கோகுல் என்ற சொண்டி கோகுல், 22, ரவுடி. இவர் மீது 20க்கும் மேற்­பட்ட வழக்­கு­கள் நிலு­வை­யில் இருந்­து­வந்த நிலை­யில், கோகுல் தனது நண்­பர் மனோஜ் என்­ப­வ­ரு­டன் நேற்று முன்­தி­னம் கோவை நீதி­மன்­றத்­தில் கையெ­ழுத்து போட்­டு­விட்டு வெளியே வந்து ஒரு கடை­யில் தேநீர் குடித்­துக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது அங்கு வந்த ஒரு கும்­பல் திரைப்­ப­டங்­களை மிஞ்­சும் வகை­யில் திடீ­ரென கோகு­லைச் சுற்றி வளைத்து கண் இமைக்­கும் நேரத்­தில் சர­மா­ரி­யாக வெட்­டிக்­கொன்­ற­னர். தடுக்க முயன்ற மனோ­ஜும் தாக்­கப்­பட்­டார். கொலை­கா­ரர்­க­ளைப் பிடிக்க எட்டு தனிப்­படை காவ­லர்­கள் கள­மி­றங்­கி­னர்.