அந்நிய மரங்கள் வளர்ப்புக்கு தடைவிதிக்க அரசுக்கு உத்தரவு

அந்நிய மரங்கள் வளர்ப்புக்கு தடைவிதிக்க அரசுக்கு உத்தரவு

1 mins read
35f4adbf-571b-4cf3-8a50-59853cd9375e
தனி­யார் எஸ்­டேட்­டில் அந்­நிய மரங்­களை வளர்ப்­ப­தற்கு தடை விதித்­தும் அங்­குள்ள அந்­நிய மரங்­களை அகற்­ற­வும் வலி­யு­றுத்தி அறி­விப்­பாணை வெளி­யி­டும்­படி தமி­ழக அர­சுக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. படம்: பிக்ஸாபே -

சென்னை: தனி­யார் எஸ்­டேட்­டில் அந்­நிய மரங்­களை வளர்ப்­ப­தற்கு தடை விதித்­தும் அங்­குள்ள அந்­நிய மரங்­களை அகற்­ற­வும் வலி­யு­றுத்தி அறி­விப்­பாணை வெளி­யி­டும்­படி தமி­ழக அர­சுக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேற்­குத் தொடர்ச்சி மலை பாது­காப்பு குறித்த வழக்­கு­கள் நீதி­ப­தி­கள் சதீஷ்­கு­மார், பரத சக்­க­ர­வர்த்தி ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன்பு நேற்று மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தன.

அப்­போது, மாநில அர­சின் கொள்­கைப்­படி தனி­யார் எஸ்­டேட்­டில் அந்­நிய மரங்­களை வளர்க்­கத் தடை விதிப்­ப­தற்கு அர­சாணை வெளி­யிட வேண்டும் என்று உத்­த­ர­விட்­ட­னர். அத்­து­டன், அகற்­றப்­படும் மரங்­களை விற்று அதன்­மூலம் கிடைக்­கும் தொகை­யைக் கொண்டு வனங்­க­ளைச் சீரமைக்க வேண்­டும் என­வும் அறி­வு­றுத்தி, விசா­ர­ணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்­த­னர்.