கடற்கொள்ளையர் தாக்குதல்: ஏழு மீனவர்கள் காயம்

1 mins read

நாகை: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் ஏழு மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று படகுகளில் வந்த 10 இலங்கை கடற்கொள்ளை யர்கள் கத்தி, அரிவாள், கட்டைகள் கொண்டு மீனவர்களை தாக்கினர்.

இதில் ஏழு மீனவர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், காயமடைந்த ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.