இன்ஸ்டகிராம் தளத்தில் மோதிக்கொண்ட ரவுடிக் கும்பல்கள்

இன்ஸ்டகிராம் தளத்தில் மோதிக்கொண்ட ரவுடிக் கும்பல்கள்

2 mins read

கோவை: இரண்டு ரவு­டிக் கும்பல்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இன்ஸ்­ட­கி­ராம் தளம் மூலம் தொடர்ந்து மோதி வந்­ததை கோவை காவல்­து­றை­யி­னர் கண்டு­பி­டித்­துள்­ள­னர்.

அக்­கும்­பல்­க­ளின் சமூக ஊட­கப் பதி­வு­க­ளைக் கண்டு காவல்­து­றை­யி­னர் கடும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

கோவை மாவட்­டம், கண்ணப்ப நகர் பகு­தி­யில் இரண்டு ரவு­டிக் கும்­பல்­கள் இயங்கி வரு­கின்­றன. அவர்­கள் தங்­க­ளுக்­குள் அடிக்கடி மோதிக்கொள்­வ­தும் அதில் பலர் படு­கா­ய­ம­டை­வ­தும் வழக்­க­மாக இருந்­துள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­களுக்கு முன்பு ஸ்ரீராம் என்­ப­வர் முன்­வி­ரோ­தம் கார­ண­மாக கொல்­லப்­பட்­டார். இது தொடர்­பாக கோகுல் உள்­ளிட்ட ஐந்து பேர் கைதா­கி­னர்.

இந்­நி­லை­யில் ஸ்ரீராம் கொலைக்­குப் பழி­தீர்க்­கும் வித­மாக கடந்த 13ஆம் தேதி நீதி­மன்ற வளா­கத்­தில் வைத்தே கோகுலை படு­கொலை செய்­தது எதிர்த்­த­ரப்பு.

இது தொடர்­பாக காவல்­துறை மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­யின் போது­தான் இரண்டு ரவு­டிக் கும்­பல்­கள் இன்ஸ்­ட­கி­ரா­மில் மோதிக்கொண்­டது தெரி­ய­வந்தது.

இரு கும்­பல்­க­ளுக்­கும் தொடர்பு­டைய கொலைச் சம்­பவங்­கள் தொடர்­பாக ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட காணொ­ளிப் பதி­வு­கள் சமூக ஊட­கத் தளத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

அந்­தக் காணொ­ளி­களில் இரு கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­களும் பட்­டாக்­கத்தி, அரி­வாள், துப்­பாக்கி ஆகி­ய­வற்றை ஏந்­தி­ய­படி காட்சி அளிக்­கின்­ற­னர்.

இரு தரப்­பி­ன­ரும் ஒரு­வ­ருக்­குப் போட்­டி­யாக மற்­றொ­ரு­வர் என காணொ­ளி­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்­துள்ள காவல்­துறை, சமூக ஊட­கங்­களில் பல்­வேறு பெயர்­களில் இயங்கி வரும் இவ்விரு கும்­பல்­க­ளின் கணக்கு­களை முடக்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே இவ்­விரு கும்­பல்­களில் ஒன்றை தலை­ம­றை­வாக இருந்­த­படி வழி­ந­டத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அவ­ருக்­கும் வலை­வீசப்­பட்­டுள்­ளது.