மதுரை: கோவில்களில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது.
"கோவில்களில் அனைவரும் அமைதியான முறையில் வழிபாடு செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று நீதிமன்ற உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
உயர் சாதியினர் தங்களை கோவிலில் வழிபாடு செய்ய விடாமல் தடுப்பதாகவும் குலசாமி பூசை செய்ய அனுமதி கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அம்மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

