ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் கைது

2 mins read
9c40669d-c9a5-4bff-b58b-9c790bb99170
-

சென்னை: அண்­மை­யில் திரு­வண்­ணா­ம­லை­யில் நிகழ்ந்த ஏடி­எம் கொள்ளை வழக்­கில் தொடர்­பு­டைய கும்­ப­லின் தலை­வர் உள்­ளிட்ட இரு­வரை தமி­ழக காவல்­துறை கைது செய்­துள்­ளது.

அவர்­க­ளி­டம் இருந்து மூன்று லட்­சம் ரூபாய் ரொக்­கப்­ப­ணம், கொள்­ளை­ய­டிக்­கப் பயன்­ப­டுத்திய வாக­னம் ஆகி­யவை பறி­முதல் செய்­யப்­பட்­டன.

ஹரி­யானா மாவட்­டத்­தில் இருந்து திரு­வண்­ணா­ம­லைக்கு வந்து அடுத்­த­டுத்து நான்கு ஏடி­எம் மையங்­க­ளைச் சூறை­யாடிய கும்­பல், திட்­ட­மிட்டு இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வத்தை அரங்­கேற்றி இருந்­தது.

இதை­ய­டுத்து, கொள்­ளைக் கும்­ப­லைக் கண்­டு­பி­டிக்க சிறப்­புப் படை­கள் அமைக்­கப்­பட்­டன.

தீவிர விசா­ர­ணைக்­குப் பின்­னர் பத்து பேர் கைதான நிலை­யில், இந்­தக் கொள்­ளைக்கு மூளை­யா­கச் செயல்­பட்ட கொள்­ளை­க் கும்­ப­லின் தலை­வன் முக­மது ஆரீஃப் (35), அவ­னது கூட்­டா­ளி­யான ஆசாஜ் (37) ஆகிய இரு­வ­ரை­யும் ஹரி­யானா மாநி­லம் மேவாட் மாவட்­டத்­தில் வைத்து தனிப்­ப­டை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

வனப்­ப­குதி நிறைந்த மேவாட் மாவட்­டத்­தில் ஏரா­ள­மான குற்­ற­வா­ளி­கள் பதுங்கி இருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. வட­மா­நி­லங்­களில் கொலை, கொள்ளை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோர் காவல்­து­றை­யின் நெருக்­கடி அதி­க­மா­கும்­போது இந்த வனப்­ப­கு­தி­களில் பதுங்­கு­வது வழக்­க­மாக உள்­ளது.

தங்­க­ளைத் தேடி வரும் காவல்­து­றை­யி­னரை குற்­ற­வா­ளி­கள் தாக்­கு­வ­தும் தெரிய வந்­துள்­ளது. இந்த ஆபத்தை எதிர்­கொண்டு குற்­ற­வா­ளி­களைத் தமி­ழக காவல்­துறை கைது செய்­துள்­ளது.

விசா­ர­ணை­யின்­போது முக்­கிய குற்­ற­வா­ளி­யான முக­மது ஆரீஃப், ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் நிரப்­பும் தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் சில மாதங்­கள் பணி­யாற்றி, இயந்­தி­ரத்­தின் தொழில்­நுட்­பம் குறித்து நன்கு தெரிந்­து­கொண்­டுள்­ளார். அதன் பிறகே கொள்­ளை­ய­டித்­துள்­ளார்.

திரு­வண்­ணா­ம­லை­யில் தனது கைவ­ரி­சை­யைக் காட்­டும் முன்பே நான்கு மாநி­லங்­களில் உள்ள ஏடி­எம் மையங்­களில் முக­மது ஆரீஃப் கும்­பல் கொள்­ளை­ய­டித்­துள்­ளது. எனவே, அம்­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த காவல்­து­றை­யி­ன­ரும் அவ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.