நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

1 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­தல் களத்­தில் அமைதி வழி­யில் பரப்­புரை செய்து கொண்­டி­ருந்த நாம் தமிழர் கட்­சி­யி­னர் மீது கொலை­வெறித் தாக்­கு­தல் நடத்­தியவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என நாம் தமி­ழர் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தோல்வி பயத்­தில், அதி­கா­ரத் திமி­ரில் மேற்­கொள்­ளும் இத்­த­கைய வன்­முறை வெறி­யாட்­டங்­களால் நாம் தமி­ழர் கட்­சியை ஒரு­போ­தும் முடக்­கி­விடமுடி­யாது என அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஆளும் கட்­சி­யி­ன­ரின் இத்­த­கைய வன்­முறை வெறி­யாட்­டங்­களைத் தேர்­தல் ஆணை­யம் இனி­யும் கைகட்டி வேடிக்கை பார்ப்­பது ஜன­நா­ய­கத்­தின் மீதும் தேர்­தல் ஆணை­யத்­தின் மீதான நம்­பிக்­கை­யை­யும் மு­ழு­தாக தகர்ப்­ப­தா­கவே அமை­யும்.

"இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்­கள் உரிய பாடம் புகட்­டு­வார்­கள்," என சீமான் தெரி­வித்­துள்­ளார்.