தூத்துக்குடியில் மேலும் ஒரு 'சிப்காட்' வளாகம்

தூத்துக்குடியில் மேலும் ஒரு 'சிப்காட்' வளாகம்

1 mins read

தூத்­துக்­குடி: அடுத்த பத்து ஆண்­டு­களில் தூத்­துக்­குடி மாவட்­டம் பெரும் வளர்ச்சி காணும் என அம்­மா­வட்ட ஆட்­சி­யர் கி.செந்­தில் ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

தூத்­துக்­கு­டி­யில் நடை­பெற்ற துறை­மு­கம் சார்ந்த போக்­கு­வரத்து வளர்ச்சி குறித்த கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசிய அவர், அம்­மா­வட்­டத்­தில் புதிய விமான நிலை­யம், சிப்­காட் தொழில் வளா­கம் ஆகி­ய­வற்றை அமைக்க நிலங்­கள் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"தூத்­துக்­குடி வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­வ­தால், இங்கு முத­லீடு செய்ய பலர் ஆர்­வ­மாக உள்­ள­னர்.

"தூத்­துக்­குடி விமான நிலை­யத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக 600 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு விரி­வாக்­கப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அதன்­பி­றகு இங்­கி­ருந்து சென்னை, டெல்லி, மும்­பைக்கு சரக்­கு­கள் அனுப்­பு­வ­தற்கு வாய்ப்­பு­கள் உள்­ளன.

"சிப்­காட் அமைப்­ப­தற்­காக அல்­லி­கு­ளத்­தில் 2,500 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது," என்­றார் ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ்.