'நீட்': உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புது மனு

2 mins read

'கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாக உள்ளது'

புது­டெல்லி: மருத்­து­வப் படிப்­புக்­கான 'நீட்' நுழை­வுத் தேர்வை ரத்து செய்ய வலி­யு­றுத்தி தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் புதிய மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­துள்ளது.

மத்­திய அரசு கொண்டு வந்த 'நீட்' தேர்­வுக்கு தமி­ழ­கத்­தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அத்­தேர்வை ரத்து செய்ய அல்லது தமி­ழ­கத்­துக்கு அத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இதை­ய­டுத்து நீட் தேர்­வில் இருந்து விலக்கு அளிக்­கக்­கோரும் தீர்­மா­னம் ஒன்று தமிழக சட்­டப்­பே­ர­வை­யில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

பின்­னர் ஆளு­ந­ரின் ஒப்­பு­தலுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்ட இந்த மசோதா நீண்­ட­கா­ல­மாக கிடப்­பில் போடப்­பட்­டது. அதை­யடுத்து இந்த மசோ­தாவை தமிழக அர­சுக்குத் திருப்பி அனுப்­பி­னார் ஆளு­நர்.

இந்­நி­லை­யில் இரண்­டாவது முறை­யாக நீட் மசோதா ஆளுநரின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்­பப்­பட்­டது. இது­கு­றித்து தமி­ழக அரசு விளக்­கம் கேட்­ட­போது, அதை அதி­ப­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்பி இருப்­ப­தாக தமி­ழக ஆளு­நர் மாளிகை தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, நீட் தேர்வு விலக்கு தொடர்­பாக தமி­ழக அரசு விளக்­கம் அளிக்க வேண்­டும் என மத்­தி­ய அரசு கேட்­டுக்­கொண்­டது. அதற்கு சட்ட வல்­லு­நர்­க­ளி­டம் ஆலோ­சனை நடத்தி தமி­ழக அரசு பதில் அளித்­தது.

இந்­நி­லை­யில், நீட் தேர்வை ரத்­து­செய்ய வேண்­டும் என்று கோரி உச்ச நீதி­மன்­றத்தை மீண்­டும் அணு­கி­யுள்­ளது தமி­ழக அரசு. இது தொடர்­பாக தமிழ்­நாடு அரசு தாக்­கல் செய்­துள்ள புதிய மனு­வில், நீட் தேர்­வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்­றும் இது தொடர்­பான மத்­திய அர­சின் செயல்­பாடு கூட்­டாட்சிக் கொள்­கையை மீறு­வ­தாக உள்­ளது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நீட் தேர்வு தொடர்­பான உச்ச நீதி­மன்­றத்­தின் முந்தைய தீர்ப்பு மாநில அரசைக் கட்­டுப்­ப­டுத்­தாது என்று அறி­விக்க வேண்­டும் என­வும் தமி­ழக அரசு கோரி­யுள்­ளது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெறும்போது மத்திய அரசு தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் எனத் தெரிகிறது.