திண்டுக்கல்: நத்தம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
அது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்றும் நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள் என்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணிக்கராஜ் தெரிவித்துள்ளார்.
"தற்போது குதிரை வீரன் நடுகல் கிடைத்துள்ளது. நாயக்கர் காலத்தில் இப்பகுதியை குறுநில மன்னன் ஆட்சி செய்திருக்கலாம்.
"அந்த மன்னன் அல்லது தளபதியைச் சித்திரிக்கும் வகையில் குதிரை வீரன் நடுகல் உள்ளது. போரில் வீர மரணம் அடைந்த பின் குறுநில மன்னனின் நினைவாக இந்நடுகல் எழுப்பப்பட்டிருக்கக் கூடும்," என்கிறார் மாணிக்கராஜ்.

