பாலியல் வழக்கு: நான்கு நாள் விசாரணை; இரு ஆடவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாலியல் வழக்கு: நான்கு நாள் விசாரணை; இரு ஆடவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை

2 mins read

திண்டுக்கல்: பாலி­யல் தொல்லை வழக்­கில் நான்கு நாள்­க­ளுக்­குள் விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளி­களுக்குத் தண்­டனை வழங்­கி­யுள்­ளது கொடைக்­கா­னல் நீதி­மன்றம். இதற்கு சமூக ஆர்­வ­லர்­கள் பலர் பாராட்டுத் தெரி­வித்­துள்­ள­னர்.

திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் உள்ள மேல்­மலை கிரா­மத்­தைச் சேர்ந்த 28 வய­தான பெண் ஒருவர் அப்­ப­கு­தி­யில் தங்­கும் விடுதி நடத்தி வரு­கி­றார்.

கடந்த 4ஆம் தேதி­யன்று கொடைக்­கா­னல் சென்­று­விட்டு அவர் காரில் விடு­திக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­தார்.

அப்­போது மன்­ன­வ­னூர் பகு­தி­யைச் சேர்ந்த ஜீவா (22 வயது), பூண்டி பகு­தி­யைச் சேர்ந்த பால­மு­ரு­கன் (26 வயது) ஆகிய இரு­வ­ரும் அவ­ரது காரை வழி­யில் தடுத்து நிறுத்தி உள்­ள­னர்.

செல்­லும் வழி­யில் தங்­களை இறக்­கி­வி­டு­மாறு இரு­வ­ரும் கேட்­ட­தால் அவர்­க­ளுக்கு உதவ முன்­வந்­துள்­ளார் அந்த இளம்­பெண்.

எனி­னும், காரில் ஏறிக்­கொண்ட இரு ஆட­வர்­களும் அப்­பெண்­ணுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ள­னர்.

இத­னால் பாதிக்­கப்­பட்ட இளம்­பெண் காவல்­து­றை­யில் புகார் அளித்­தார். அதன் பேரில் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்ட காவல்­துறை, ஜீவா­வை­யும் பால­மு­ரு­க­னை­யும் அதி­ர­டி­யா­கக் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்­டது.

பாலி­யல் தொல்லை கொடுத்­தது உறு­தி­யா­னதை அடுத்து வழக்­குப்­­ப­தி­வா­னது.

பின்­னர் கடந்த 10ஆம் தேதி கொடைக்­கா­னல் இரண்­டா­வது நடு­வர் மன்­றத்­தில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது இரு­வ­ரும் குற்­றம் புரிந்­தது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­பதி கே.கார்த்­திக் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து குற்­ற­வா­ளி­கள் இரு­வ­ருக்­கும் தலா ஏழு ஆண்டு­கள் சிறைத்­தண்­ட­னை­யும் தலா ரூ.20 ஆயி­ரம் அப­ரா­த­மும் விதித்து அவர் தீர்ப்­பளித்­துள்ளார்.

இந்த வழக்­கில் நான்கே நாள்­களில் விசா­ரணை நடத்தி, தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.