ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த வாக்காளர்களின் காலில் விழுவது, சாலையோரக் கடைகளை நடத்தும் வியாபாரிகளின் மனதைக் கவர இட்லி, தோசை சுடுவது, இளநீர் வெட்டுவது என பல வகைகளில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
படங்கள்: (இடமிருந்து) தேமுதிக இளையரணித் தலைவர் சுதீஷ் இட்லி சாப்பிட்டும் காங்கிரஸ் கட்சியினர் தோசை சுட்டும் வாக்கு சேகரித்தனர்.