ரூ.70 லட்சம் மாயம்; கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை

ரூ.70 லட்சம் மாயம்; கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை

1 mins read

சென்னை: திரு­வண்­ணா­ம­லை­யில் நான்கு ஏடி­எம் மையங்­களில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணம் எங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறித்து கைதான கொள்­ளை­யர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடந்து வரு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளுக்கு மூளை­யா­கச் செயல்­பட்ட முக­மது ஆரீ­ஃப்­பும் அவனது கூட்­டா­ளி­யும் அண்­மை­யில் கைதா­கி­னர்.

அப்­போது கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணத்­தில் ரூ.3 லட்­சம் பறிமுதல் செய்­யப்­பட்­டது. மீத­முள்ள ரூ.70 லட்­சம் என்­ன­வானது என்­பது தெரி­ய­வில்லை.

கொள்­ளை­ய­டித்த ரூ.73 லட்சத்தை ஒரு லாரி­யில் வைத்து முக­மது ஆரீ­ஃப்­பும் அவ­னது கூட்­டா­ளி­களும் எடுத்­துச் சென்ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது அந்­தப் பணம் குறித்து கொள்­ளை­யர்­கள் எந்­தத் தக­வ­லை­யும் தெரி­விக்­க­வில்லை.

கைதான இரு கொள்­ளை­யர்­க­ளை­யும் மார்ச் 3ஆம் தேதி வரை சிறை­யில் அடைக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட நிலை­யில், கொள்ளை நடந்த ஆறு நாள்­களில் கொள்­ளை­யர்­களை மடக்கிப் பிடித்த தமி­ழக காவல்­துறையின் தனிப்­ப­டைக்­குப் பாராட்­டு­கள் குவிந்­துள்­ளன.

மேலும், காவல்துறை சார்பில் தனிப்படையினருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.