சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மலிவு விலையில் மக்களுக்கு வீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம்-2030' தொடக்க விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள், உயர் வருவாய் பிரிவு மக்களுக்கு வீட்டு வசதியை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
"ஒற்றைச்சாளர முறையில் 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளை வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

