புதுடெல்லி: 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழக்கங்களை எழுப்புவது எளிது என்றும் அவற்றைச் செயல்படுத்துவது கடினம் என்றும் குறிப்பிட்டார்.
"அந்த வகையில், 'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்குப் பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு ஒத்துவராது.
"கூட்டாட்சித் தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படும் அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தேசிய அளவில் மட்டும் அமைப்பதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

