மதுபோதை: அசையும் சொத்துகள் பறிமுதல்

மதுபோதை: அசையும் சொத்துகள் பறிமுதல்

1 mins read

வாகனமோட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­னால் சம்­பந்­தப்­பட்­ட­வ­ரின் அசை­யும் சொத்­து­கள், வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் என தமி­ழக போக்­கு­வ­ரத்து காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­தப் பறி­மு­தல் நட­வ­டிக்­கை­கள் நீதி­மன்­றத்­தின் மூலம்் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் மது விற்­ப­னை­யைப் போன்றே, மது­போ­தை­யில் வாக­னம் ஓட்­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய விபத்­து­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

மது­போ­தை­யில் வாகனம் ஓட்டு­ப­வர்­க­ளுக்கு தற்­போது பத்­தா­யி­ரம் ரூபாய் அபா­ர­தம் விதிக்­கப்­ப­டு­கிறது. ஆனால் பலர் அப­ரா­தம் செலுத்­து­வ­தில்லை. போக்கு­வ­ரத்து விதி­மீ­றல் தொடர்­பான அப­ரா­தத் தொகை­களை வசூ­லிப்­ப­தற்­கென்றே சிறப்பு முகாம்­கள் நடத்­தப்்­பட வேண்­டி­உள்­ளது.

இதை­ய­டுத்தே அசை­யும் சொத்­து­க­ளைப் பறி­மு­தல் செய்­யும் நட­வ­டிக்­கையை அமல்­ப­டுத்­தப் போக்­கு­வ­ரத்து காவல்­துறை முடிவு செய்­துள்­ளது. இனி மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டு­ப­வர்­கள், அப­ரா­தம் செலுத்­தாத பட்­சத்­தில் சம்­பந்­தப்­பட்­ட­வ­ரின் வாக­னங்­களோ அல்­லது அசை­யும் சொத்­துக்­களோ நீதி­மன்­றங்­கள் வாயி­லாக பறி­மு­தல் செய்­யப்­படும் எனக் காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே தமி­ழ­கத்­தில் கஞ்சா விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­வோர், தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­கள், போதைப் பாக்­கு­களை விற்­போ­ரின் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­ப­டு­கின்­றன.

சில வழக்­கு­களில் கஞ்சா வியா­பா­ரி­க­ளின் அசையா சொத்­து­க­ளும்­கூட பறி­மு­தல் செய்­யப்­ப­டு­கின்­றன. தற்­போது அது­போன்ற கடும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மது­போ­தை­யில் வாக­னம் ஓட்­டு­வோ­ரும் ஆட்­பட உள்­ள­னர். காவல்துறையின் இந்த அறி­விப்பை சமூக ஆர்­வ­லர்­கள் பலரும் வர­வேற்­றுள்­ள­னர்.