மகன் உடலில் தானாகத் தீப்பிடிக்கிறது: கண்ணீர் மல்க அரசு உதவி கோரும் தாயார்

மகன் உடலில் தானாகத் தீப்பிடிக்கிறது: கண்ணீர் மல்க அரசு உதவி கோரும் தாயார்

2 mins read
0ca7c580-14d1-4cb6-bcff-40e120ba9740
-

விழுப்­பு­ரம்: வினோத நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள தனது மக­னுக்குத் தமி­ழக அரசு உத­விக்­க­ரம் நீட்ட வேண்­டும் என சிறு­வ­னின் தாயார் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் விழுப்­பு­ரம் மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் நேற்று முன்­தி­னம் மனு அளித்­துள்­ளார்.

திண்­டி­வ­னம் அருகே உள்ள நெடி மோழி­ய­னூ­ரைச் சேர்ந்­த­வர் ராஜேஸ்­வரி. இவ­ரது மக­னான பத்து வயது ராகு­லுக்கு விநோ­த­மான பிரச்­சினை உள்­ளது.

சிறு­வ­னின் உட­லில் அவ்­வப்­போது திடீ­ரென தீப்­பற்­றிக்­கொள்­ளும். இதற்கு என்ன கார­ணம் என்­பது இது­வரை தெரி­ய­வில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு மகன் ராகு­லைப் பெற்­றெ­டுத்­த­தா­க­வும் பிறந்து ஒன்­பது நாள்­க­ளி­லேயே ராகு­லின் உடல் தானா­கத் தீப்­பிடித்து எரிந்­தது தங்­க­ளுக்­குப் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­வும் ராஜேஸ்­வரி தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து, தமி­ழக அர­சின் உத­வி­யோடு சென்னை கீழ்­ப்பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட ராகு­லுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அதன் பிறகு தீப்­பி­டித்து எரி­வது குறைந்­துள்­ள­தாக ராஜேஸ்­வரி கூறி­னார்.

"எனக்­கும் எனது குழந்­தைக்­கும் உத­வித்­தொகை, தொகுப்பு வீடு, எனது கண­வர் பிழைப்பு நடத்த வாகனக் கடன், இல­வச வீட்டு மனைப்பட்டா வழங்­கு­வதாக அரசு முன்பு தெரி­வித்­தது. ஆனால் உத­வி­கள் ஏதும் கிடைக்­க­வில்லை.

"தற்­போது எனது மக­னு­டன் தாய் வீட்­டில் வசித்து வரு­கி­றேன். ராகுல் ஐந்­தாம் வகுப்பு படித்து வரு­கி­றான். அவ­னுக்கு தீக்­கா­யம் ஏற்­பட்ட தலை, வயிற்­றுப் பகு­தி­யில் பெரிய தழும்­பு­கள் உள்­ளன," என்று ராஜேஸ்­வரி செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.

சிறு­வன் ராகு­லுக்கு அடிக்­கடி உடல்­ந­லம் பாதிக்­கப்­ப­டு­கிறது என்­றும் அரசு உதவி கிடைத்­தால் ஓர­ளவு நிம்­மதி கிடைக்­கும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார். சிறுவன் ராகுலுக்கு உள்ள வினோதப் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான மருத்துவத் தீர்வு கிடைக்கவில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.