இடைத்தேர்தலுக்கு தடை கோரி உண்ணாவிரதம்

இடைத்தேர்தலுக்கு தடை கோரி உண்ணாவிரதம்

2 mins read
fe5a4a22-bfeb-4237-b511-88003fcd42b8
-

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லுக்கு தடை­வி­திக்­கக் கோரி மறு­ம­லர்ச்சி மக்­கள் இயக்­கம் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு தள்ளு­ப­டி­யா­னது.

இடைத்­தேர்­தல் முறை­கே­டு­கள் தொடர்­பாக விசா­ரிக்க உயர் நீதி­மன்ற ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மை­யில் குழு அமைக்­கும் வரை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்­த­லுக்குத் தடை விதிக்க வேண்­டும் என அந்த இயக்­கத்­தின் தலை­வர் ஈஸ்­வ­ரன் தமது மனு­வில் வலி­யு­றுத்தி இருந்­தார்.

அந்த மனு மீதான விசா­ரணை நேற்று நடை­பெற்­றது. அப்­போது, தேர்­த­லின்­போது வாக்­கா­ளர்­களுக்­குப் பணம் கொடுப்­பதை தடுக்க பல்­வேறு சட்­டங்­கள் உள்ள நிலை­யி­லும் வாக்­காளர்­க­ளுக்கு பணம் கொடுப்­பது தொடர்­வ­தா­க­வும் இத­னைத் தடுக்க தேர்­தல் ஆணை­யம் போதிய நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை என­வும் மனு­தா­ரர் தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

இரு தரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­ப­தி­கள், ஏற்­கெ­னவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்­தேர்­தல் முறை­கேடு தொடர்­பான வழக்­கில் நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்டி, இந்த வழக்கை தள்ளு­படி செய்து உத்­த­ர­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, இடைத்­தேர்­தல் தொடர்­பான மற்­றொரு வழக்­கில் பதில் மனு தாக்­கல் செய்த தேர்­தல் ஆணை­யம், இடைத்­தேர்­த­லில் முறை­கே­டு­களைத் தடுக்­கத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, ஈரோடு கிழக்­குத் தொகுதி வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் ஐம்­ப­தா­யி­ரம் போலி வாக்­கா­ளர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கம் குற்­றம்­சாட்டி இருந்­தார்.

இது தொடர்­பாக அவர் உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­கும் தொடுத்­தி­ருந்­தார். அதை விசா­ரித்த நீதி­மன்­றம், தேர்­தல் ஆணை­யம் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அளித்­துள்ள உறு­தி­மொ­ழியை ஏற்­றுக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்டு, சண்­மு­கத்­தின் மனுவை தள்­ளு­படி செய்­தது.

இதற்­கி­டையே, இடைத்­தேர்­த­லில் பணப்­பட்­டு­வா­டாவை தடுக்க வலி­யு­றுத்தி மறு­ம­லர்ச்சி மக்­கள் இயக்­கத்­தி­னர் நேற்று ஈரோட்­டில் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தி­லும் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து காவல்­து­றை­யினர் அவர்களுடன் நடத்­திய தொடர் பேச்­சு­வார்த்­தை­யின் முடி­வில் அந்தப் போராட்­டம் கைவிடப்­பட்­டது.