திமுக பொதுக்கூட்டம்: புதிய கூட்டணிக்கு அச்சாரம் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின்

2 mins read

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பிறந்­த­நாளை ஒட்டி நடை­பெற உள்ள பொதுக்­கூட்­டத்­தின் மூலம் தேசிய அள­வி­லான புதிய அர­சி­யல் கூட்­ட­ணிக்கு திமுக தலைமை அச்­சா­ரம் போட இருப்­ப­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

எதிர்­வ­ரும் மார்ச் 1ஆம் தேதி நடை­பெற உள்ள இந்­தப் பொதுக்­கூட்­டத்­தில் தேசிய அள­வி­லான அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் பங்­கேற்க உள்­ள­னர் என்­றும் திமுக தலை­வர் ஸ்டா­லின் தமது 70வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைப்­பது திமு­க­வி­ன­ருக்கு மட்­டு­மல்­லா­மல், தமி­ழக மக்­கள் அனை­வ­ருக்­கும் கொண்­டாட்­ட­மாக அமை­யும் என்­றும் திமுக பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

திமுக பொதுக்­கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்கே, காஷ்­மீர் மாநில முன்­னாள் முதல்­வ­ரு­மான ஃபரூக் அப்­துல்லா, சமாஜ்­வாடி கட்­சித் தலை­வ­ரும் உத்­த­ரப் பிர­தேச மாநில முன்­னாள் முதல்­வ­ரு­மான அகி­லேஷ் யாதவ், ராஷ்ட்­ரிய ஜனதா தளம் கட்­சித் தலை­வ­ரும் பீகார் மாநி­லத் துணை முதல்­வ­ரு­மான தேஜஸ்வி யாதவ் உள்­ளிட்­டோர் பங்­கேற்க உள்­ள­னர்.

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜ­க­வுக்கு எதி­ராக புதிய எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­கான முயற்­சியை தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­க­ர­ ராவ், பீகார் முதல்­வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்­வர் மம்தா பானர்ஜி ஆகி­யோர் தனித்­த­னியே மேற்­கொண்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னும் அத்­த­கைய முயற்­சி­யைத் தொடங்கி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நாடு தழு­விய அள­வில் எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­பது தொடர்­பான முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள மேற்­கு­றிப்­பிட்ட மூன்று தலை­வர்­க­ளுக்­கும் இன்­னும் எதிர்­பார்த்த வெற்றி கிடைக்­க­வில்லை. மூன்று தலை­வர்­க­ளுமே எதிர்க்­கட்­சி கூட்­ட­ணிக்­குத் தலை­மை­யேற்க விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அத­னால் ஒரு­வ­ரது முயற்­சிக்கு மற்­றொ­ரு­வர் உத­வி­க­ர­மாக இல்லை. இந்­நி­லை­யில், மூன்று தலை­வர்­க­ளுமே காங்­கி­ரஸ் தலை­மை­யில் எதிர்க்­கட்­சி கூட்­டணி அமை­வதை விரும்­ப­வில்லை என்­றும் தெரி­கிறது.

இத்­த­கைய சூழ­லில் காங்­கி­ரஸ் தலை­மை­யில் கூட்­டணி அமைப்­பதை திமுக தலைமை விரும்­பு­வ­தா­க­வும் அதற்­கேற்ப முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அர­சி­யல் அரங்­கில் காய்­களை நகர்த்தி வரு­வ­தா­க­வும் அர­சி­யல் நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.