தாக்குதல் நடத்திய ரவுடிகள்; சுட்டுப் பிடித்த காவல்துறை

2 mins read
53e28530-e402-4683-a787-761d7d98f8e9
-

திருச்சி: பயங்­கர ஆயு­தங்­க­ளைக் கொண்டு காவல்­து­றை­யி­ன­ரைத் தாக்­கி­விட்டு தப்­பி­யோட முயன்ற இரு ரவு­டி­களைத் துப்­பாக்­கிச்­சூடு நடத்தி காவ­லர்­கள் வளைத்­துப் பிடித்­த­னர்.

திருச்சி மாவட்­டம், வண்ணாரப்­பேட்டை பகு­தி­யைச் சேர்ந்த 38 வய­தான துரை­சா­மி­யும் 27 வய­தான சோம­சுந்­த­ர­மும் பல்­வேறு குற்­றச்­செ­யல்­க­ளைப் புரிந்­தி­ருப்­ப­தாக காவல்­துறை தரப்­பில் கூறப்­படு­கிறது.

இரு­வர் மீதும் ஐந்து கொலை வழக்­கு­களும் ஆள் கடத்­தல், கொள்ளை, கஞ்சா விற்­பனை தொடர்­பாக 64 வழக்­கு­களும் நிலு­வை­யில் உள்­ளன.

திருச்சி மாவட்­டத்­தில் மட்­டும் 30 வழக்­கு­கள் உள்­ள­தா­க­வும் தஞ்சை, புதுக்­கோட்டை, அரி­ய­லூர், நாமக்­கல் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் மீதி வழக்­கு­களும் உள்­ளன.

கடந்த இரண்டு ஆண்­டு­களாக இரு­வ­ரும் தலை­ம­றை­வாக இருந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் இவர்கள் பதுங்கி இருக்­கும் இடம் குறித்து காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து விரைந்து சென்ற காவல்­து­றை­யி­னர் இரு­வ­ரை­யும் கைது செய்­த­னர்.

பின்­னர் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது பல்­வேறு கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளின்­போது தாங்­கள் கொள்­ளை­ய­டித்த நகை­கள், ரொக்­கப் பண­ம், ஆயு­தங்­களை ரக­சிய இடத்­தில் பதுக்கி வைத்­தி­ருப்­ப­தாக இரு­வ­ரும் கூறி­யதை அடுத்து, காவல்­து­றை­யி­னர் அவர்களை அங்கு அழைத்­துச் சென்­ற­னர்.

காவல் வாக­னத்­தில் சென்று கொண்­டி­ருந்­த­போது இரு ரவு­டி­களும் திடீ­ரென காவல்­து­றை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர். இத­னால் வாகன ஓட்­டு­நர் நிலை­கு­லைந்­து­போக, அந்த வாக­னம் சாலை­யோ­ரப் பள்­ளத்­தில் இறங்­கி­யது.

இந்த வாய்ப்­பைப் பயன்­படுத்தி, இரு­வ­ரும் தங்­க­ளி­டம் இருந்து பறி­மு­தல் செய்து வாக­னத்­தில் கொண்டு செல்­லப்­பட்ட பயங்­கர ஆயு­தங்­க­ளைக் கொண்டு காவல் ஆய்­வா­ளர் உள்­ளிட்­டோர் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இதில், மூன்று காவ­லர்­களுக்கு அரி­வாள் வெட்டு விழுந்­தது. இத­னால் ரவு­டி­களை எச்­ச­ரிக்­கும் வித­மாக வானத்தை நோக்கி ஒரு­முறை துப்­பாக்­கி­யால் சுட்­டார் ஆய்­வா­ளர் மோகன்.

அதன் பிறகும் ரவு­டி­கள் இரு­வ­ரும் தாக்­கு­த­லைத் தொடர்ந்­த­தால் அவர்­களை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­டார் ஆய்­வா­ளர். இதில் ரவு­டி­க­ளின் கால்­களில் குண்டு பாய்ந்­தது. இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். பட்­டப்­ப­க­லில் நிகழ்ந்த இச்­சம்­ப­வம் திருச்­சி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே, காவ­லர்­களைத் தாக்க நினைப்­ப­வர்­களுக்கு திருச்சி துப்­பாக்­கிச்­சூடு ஒரு பாடம் என திருச்சி காவல் ஆணை­யர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.