சென்னையில் திடீர் நில அதிர்வு

1 mins read

சென்னை: திடீர் நில அதிர்வு காரணமாக சென்னை அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் பீதியடைந்தனர்.

பொதுமக்களும் அப்பகுதி களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் சில விநாடிகளுக்கு நில அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் நில அதிர்வு ஏற்படவில்லை என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியது.

மேலும், நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய மையமும் எந்த அதிர்வும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தது.