136 சிறார் திருமணங்கள் தடுக்கப்பட்டன

136 சிறார் திருமணங்கள் தடுக்கப்பட்டன

1 mins read

திருவள்ளூர்: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டு ம் திருவள்ளூர் மாவட்டத்தில் 136 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறார் திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், அம்மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியரின் பெற்றோர்களிடம் இருந்து, 'பெண் குழந்தை களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய மாட்டோம்' என்று ஓர் அஞ்சல் அட்டையில் உறுதிச் சான்று பெறப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சிறார் திருமணங்களைத் தடுப்பதில் தமிழக அரசு முனைப்பாக உள்ளது.