ஏடிஎம் கொள்ளை: இருவர் கைது

ஏடிஎம் கொள்ளை: இருவர் கைது

1 mins read

தி.மலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு பேரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த 43 வயதான குஷாத்பாஷா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான அப்சர் உசேன் ஆகிய இருவரும் கொள்ளையர் களுக்குப் பல வகையிலும் உதவி உள்ளனர்.

இந்நிலையில், அவ்விருவரும் கர்நாடகாவின், கோலார் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே மேலும் இருவரைக் கைது செய்ய தனிப்படையினர் ஹரியானா சென்றுள்ளனர்.