சென்னை: விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க உதவும் 'ஏசிடிஎம்' எனப்படும் புதிய செயலி சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தச் செயலியைக் கொண்டு இனி ஒரு மணி நேரத்தில் 45 விமானங்களை இயக்க முடியும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமான புறப்பாடு தொடர் பாக ஒருமித்த முடிவுகளை எடுப்பதற்கு இந்தச் செயலியின் தரவுகள் உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

