அழகு நிலையத்தில் பாலியல் தொழில்: 5 பெண்கள் மீட்பு

அழகு நிலையத்தில் பாலியல் தொழில்: 5 பெண்கள் மீட்பு

2 mins read

சென்னை: அழகு நிலை­யம் என்ற பெய­ரில் இளம்பெண்­களை வைத்து பாலி­யல் தொழில் நடை­பெற்று வந்­ததை சென்னை காவல்­துறை கண்­டு­பி­டித்­துள்­ளது. இதை­ய­டுத்து அழகு நிலை­யத்­தில் இருந்த இ­ளை­யர் ஒரு­வர் கைதா­னார். ஐந்து இளம்பெண்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் அழகு நிலை­யங்கள், உடம்­புபிடி நிலை­யங்­கள் என்ற பெய­ரில் இளம்பெண்­களை வைத்து பாலி­யல் தொழில் நடை­பெ­று­வதை காவல்­துறை அவ்­வப்­போது கண்­டு­பி­டித்து நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்­றில், சட்­டத்­துக்­குப் புறம்­பாக பாலி­யல் சேவை அளிக்­கப்­ப­டு­வது குறித்து காவல்­து­றைக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இணை­யம் வழி பணம் செலுத்­தி­விட்டு, அந்த சொகுசு விடு­திக்கு வரு­ப­வர்்கள், பின்­னர் அங்­குள்ள அழகு நிலை­யத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர் என்­றும் அங்­குள்ள பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த பெண்­க­ளு­டன் உல்­லா­சம் அனு­ப­விக்­க­லாம் என்­றும் இணை­யம் வழி விளம்­ப­ரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, பாலி­யல் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள கும்­பலை உரிய ஆதா­ரங்­க­ளு­டன் பிடிக்க காவல்­துறை முடிவு செய்­தது. அதன்­படி, காவல் ஆய்­வா­ளர் பிரபு என்­ப­வர் முத­லில் மாறு­வே­டத்­தில் அந்த சொகுசு விடு­திக்­குச் சென்­றார். அங்­கி­ருந்த இளை­யர், முன்­ப­திவு செய்­த­தற்­கான பதிவு எண்­களை கேட்க, அவ­ருக்­கும் இந்த முறை­கேட்­டில் தொடர்பு இருப்­பது உறுதி­யா­னது. அந்த ஆட­வர் கைதா­னார்.

அதன் பின்­னர் அழகு நிலை­யத்­துக்­குள் புகுந்த காவல்­துறை­யி­னர், அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­போது, மணிப்­பூர், அசாம் மாநி­லங்­க­ளைச் சேர்ந்த இரு பெண்­களும் சென்­னை­யைச் சேர்ந்த மூன்று பெண்­களும் பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. ஐந்து பெண்­களும் மீட்­கப்­பட்­ட­னர்.

சென்­னை­யில் அழகு நிலை­யங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு ஏற்பாடு­க­ளின் கீழ் பாலி­யல் தொழில் நடை­பெ­று­வ­தாகக் காவல்­து­றைக்குப் புகார்­கள் வரு­வதாகவும் அவற்­றின் பேரில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, சென்­னை­யில் அழகு நிலை­யம் என்ற பெய­ரில் பாலி­யல் தொழிலை நடத்தி வந்த கும்­ப­லுக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

கைதான இளை­யர் தவிர மேலும் பல­ருக்கு இதில் தொடர்பு உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இணையம்வழி பணம் செலுத்தினால் சென்னை ஆடம்பர விடுதியில் உல்லாசம்