விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதாகி உள்ள எட்டு பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எட்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்று நாள்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப் பட்டனர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குரிய விவரங் களை காவல்துறை அதிகாரிகள் பெற்று வருகின்றனர். இந்த கிடுக்கிப்பிடி விசாரணை
யின் முடிவில் மேலும் சிலர் இந்த வழக்கு தொடர்பில் கைதாக வாய்ப்பு உள்ள தாகக் கூறப்படுகிறது.

