தமிழ் மொழி வளர்ச்சிக்காக யாகம் நடத்திய ஜப்பானியர்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக யாகம் நடத்திய ஜப்பானியர்

1 mins read
21fa4a1d-f9cf-4197-8152-dce619abff78
-

தஞ்சை: தமிழ் மொழி மேன்­மேலும் சிறக்க வேண்­டும், உல­கெங்­கும் பரவ வேண்­டும் என்ற வேண்­டு­த­லு­டன் ஜப்­பான் குடி­மக்­கள் தமி­ழ­கத்­தில் நடத்­திய யாகம் மக்­கள் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் தஞ்­சா­வூர் அருகே உள்ள திட்டை வசிஷ்­டேஸ்­வ­ரர் கோயி­லில் இந்த சிறப்பு யாகம் நடந்­தே­றி­யது. இதில் ஜப்பா­னைச் சேர்ந்த இரு­பது பேர் பங்­கேற்­ற­னர். அவர்­களில் எட்டு பேர் பெண்­க­ளா­வர்.

தகா­ஈஹி எனப்­படும் பால­கும்ப­முனி என்­ப­வர் இக்­கு­ழுவை தமிழகத்­துக்கு அழைத்து வந்­துள்ளார்.

திட்டை வசிஷ்­டேஸ்­வ­ரர் கோயில் குரு தலம் என்று அழைக்­கப்­ப­டு­கிறது. ஜப்­பான் குழு­வி­ன­ரின் ஏற்­பாடு, பங்­கேற்­பு­டன் இங்கு ருத்ர யாகம் நடை­பெற்­றுள்­ளது.

யாகத்­துக்­குப் பின்­னர் சிறப்­புப் பூசை, அபி­ஷே­கம், அர்ச்­சனை ஆகி­ய­வை­யும் நடை­பெற்­ற­தாக ஜப்­பான் குழு­வி­ன­ரு­டன் வந்­துள்ள சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

இவர் கடந்த 35 ஆண்­டு­களாக ஜப்­பா­னில் வசித்து வரு­கி­றார். அங்­குள்ள ஒட்­ட­ஹோமா பல்­கலைக்­க­ழ­கம், ஆசி­யான் நூல­கத்­தில் தமிழ் மொழி கற்­றுத் தரும் சுப்­பி­ர­ம­ணி­யன் தமிழ் மொழி­யைக் கற்­ப­தி­லும் தமிழ் பண்­பாடு, கலா­சா­ரத்தை பின்­பற்று­வ­திலும் ஜப்­பா­னி­யர் மிகுந்த ஆர்­வம் காட்டி வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

"ஜப்­பா­னி­யர் மத்­தி­யில் இப்­போது ஆன்­மி­கத் தேட­லும் அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, தமி­ழ­கத்­தில் உள்ள அறு­படை வீடு­கள், முக்­கி­ய­மான சிவா­ல­யங்­களில் வழி­ப­டு­வ­து­டன், சிறப்பு யாகங்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­ற­னர்.

"தமிழ் மொழி­யின் வளர்ச்சி, உலக அமைதி ஆகி­ய­வற்றை முன்­வைத்து அண்­மைய யாகத்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்று சுப்­பி­ர­ம­ணி­யன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரி­வித்­தார்.